இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் தெரிவித்ததாவது:- கோடை வெப்பம் அதிகரித்துவரும் இச்சூழ்நிலையில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்திடும் வகையில் வாரந்தோறும் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது. குறிப்பாக, கடந்த வாரம் கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து அடுத்து நடைபெறும் ஒவ்வொரு கூட்டங்களிலும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தருமபுரி மாவட்டம் முழுவதும் குறிப்பாக மலை கிராம பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் வழங்கிட தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, துறை அலுவலர்கள் குடிநீர் தொடர்பான பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து பணியாற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கோடை காலம் என்பதால் குடிநீர் தொடர்பான புகார்கள் ஏதேனும் வரப்பெற்றால் அதன்மீது உடனடி நடவடிக்கைகளை தொடர்புடைய துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டுமெனவும், பொதுமக்களுக்குத் தேவையான சீரான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை அனைத்துத் துறை அலுவலர்களும் உறுதி செய்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.கௌரவ்குமார், இ.ஆ.ப., ஒகேனக்கல் குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் திரு.ரவிக்குமார், நகராட்சி ஆணையாளர் திரு.சோ.புவனேஷ்வரன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு.கணேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திரு.வேடியப்பன், தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ,அனைத்து பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)