Type Here to Get Search Results !

பாலக்கோடு, கடைத்தெருவில், கடையின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் நிலையம் முன்பு உள்ள கடைத்தெருவில்  செல்போன் ரீசார்ஜ் கடை நடத்தி வருபவர் பாலாஜிசந்தோஷ் (30) இவர் தனது மோட்டார் சைக்கிளை நேற்று முன்தினம் 3ம் தேதி காலை  கடையின் முன் நிறுத்தி இருந்தார்.


வேலை முடிந்து  திரும்பி வந்து பார்த்த பொழுது தனது மோட்டார் சைக்கிளை காணவில்லை, அக்கம் பக்கம் தேடி பார்த்தும் கிடைக்காத நிலையில், பாலக்கோடு போலீஸ் ஸ்டேஷனில் தனது மோட்டார் சைக்கிளை கண்டுபிடித்து தர கோரி  இன்று புகார் அளித்தார், புகாரின் பேரில்  பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மோட்டார் சைக்கிளை  தேடி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies