இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் தெரிவித்ததாவது: பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாவட்ட மனநல திட்டத்தின் கீழ் குடிபோதை மற்றும் மீட்பு மையம் 10 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. மேலும் 10 படுக்கை வசதிகள் தரம் உயர்த்தப்பட்டு மது, கஞ்சா மற்றும் இதர போதைப்பொருட்களால் பதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தயாராக உள்ளது. தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 20 படுக்கை வசதிகள் கொண்ட குடிபோதை மற்றும் மீட்பு மையம் செயல்பட்டுவருகிறது. மேலும் 20 படுக்கை வசதிகள் தரம் உயர்த்தப்பட்டு போதைப்பொருட்களால் பதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாணவர்களிடையே போதைப்பொருட்கள் பயன்பாடு இருக்கும் எனில் விடுதி காப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக இது குறித்து போதைப்பொருட்கள் தடுப்பு பிரிவு அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்திட வேண்டும். கடைகளிலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யாமல் இருப்பதை உறுதி செய்திடவேண்டும்.
மருந்துகள் மொத்த மற்றும் சில்லறை விற்பனை செய்யும் கடைகளில் அடிக்கடி மருந்து ஆய்வாளர்கள் ஆய்வு செய்து, போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படும் மருந்து கடைகள் மீது சட்டப்படி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். மேலும், போதைமருந்து தடுப்பு பிரிவு தொடர்பு எண்களை அனைத்து மருந்து கடைகளிலும் வைக்க அறிவுறுத்த வேண்டும்.
இந்த மையத்தில் மருத்துவர்கள், உளவியல் மருத்துவர் உள்ளிட்டவர்களை கொண்டு போதைப் பொருட்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தகுழு ஒருங்கிணைந்து செயல்பட்டு, போதைப்பொருட்கள் பயன்பாட்டினை முழுமையாக ஒழித்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.
மேலும் மது மற்றும் போதைப்பொருட்களால் பதிக்கப்பட்டவர்கள் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள மாவட்ட மனநல மையத்தின் தொலைபேசி எண் 94871 41105, பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்ள மாவட்ட மனநல மையத்தின் தொலைபேசி எண் 87783 44922 ஆகிய தொடர்பு எண்களை அனுகி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட மேலாளர் (டாஸ்மார்க்) திருமதி.எஸ்.மகேஷ்வரி, தேசிய நல குழுமம்/தேசிய நியமன அலுவலர் மரு.ராஜ்குமார் உள்ளிட்ட மருத்துவத்துறை அலுவலர்கள், மாவட்ட மனநல திட்ட அலுவலர்கள், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)