Type Here to Get Search Results !

காரிமங்கலம் அருகே பரிதாபம் ஒரே குடும்பத்தை சேர்ந்த மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு.


காரிமங்கலம் அருகே பரிதாபம் ஒரே குடும்பத்தை சேர்ந்த  மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு. கனவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த மணிக்கட்டியூர் கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சிவன் (வயது.38) இவரது மனைவி நந்தினி (வயது. 26) திருமணமாகி 7 வருடமாகிறது. இவர்களுக்கு அபினேஷ் (வயது. 6), தர்சன் (வயது. 4) இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியினர் காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.


சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் வீட்டின் கதவை  உடைத்து உள்ளே சென்று பார்த்த போது நந்தினி மற்றும் 2 குழந்தைளும் இறந்து, உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. சிவன் மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்பட்டார். உடனடியாக அவரை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்னர்.


மேலும் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யபட்ட நிலையில் மூவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில் 3 நாட்களுக்கு முன்னர் சம்பவம் நடந்துள்ளதாகவும்,


2 நாட்களுக்கு முன்னரே மனைவி, குழந்தைகளுக்கு  விஷம் கொடுத்து கொன்று விட்டு பிரேதத்தை வீட்டிலேயே வைத்திருந்தவர்,  என்ன செய்வதென்று தெரியாமல் போலீசுக்கு பயந்து அருவாமனையால்  தனது கையின் நரம்பை வெட்டிக் கொண்டு தற்கொலைக்கு  முயன்று இருக்கலாம் எனவும், கடன் பிரச்சனையா, குடும்ப பிரச்சனையா, கள்ளகாதல் விவகாரமா, அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என பல கோணங்களில் போலீசார் தீவிர விசாரனை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.


ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies