Type Here to Get Search Results !

பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் கூசிக்கொட்டாய் கிராமத்தில் மதுக்கடை வருவதை தடை செய்ய கோரி கிராம மக்கள் மனு.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த ஜெர்தலாவ் ஊராட்சி, கூசிக் கொட்டாய் கிராமத்தில் இந்து, முல்லீம் என 100க்கும் மேற்பட்ட  குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள்  வசித்து வருகின்றனர்.


இப்பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் புதிததாக மதுக்கடை திறக்க அரசு முடிவு செய்தது, அதனை தொடர்ந்து  சரக்கு லாரியில் மதுபானங்களை எடுத்து வரப்பட்டதை அறிந்த பொதுமக்கள் லாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதை தொடர்ந்து மதுபானகடை திறப்பு கைவிடப்பட்டது.


தற்போது மீண்டும் அதே பகுதியில் மதுபானக் கடை திறக்க உள்ளதாக தகவல் பரவியதை அடுத்து 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றினைந்து பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்திற்க்கு வந்தனர். அப்போது அங்கு இருந்த துணை ஆட்சியர் தனப்பிரியாவிடம்  கூசிக் கொட்டாய் பகுதியில்  மதுக்கடை திறக்க கூடாது என்று மனு அளித்தனர்.


அதனை தொடர்ந்து அவர்கள் கூறிய போது இப்பகுதியில் இந்து, முஸ்லீம், அனைவரும் ஒன்றாக சகோதரர்களாக வாழ்ந்து வருகிறோம், இங்கிருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவிகள் சென்று வருகின்றனர். பெண்கள் தினமும் வேலைநிமித்தமாக வெளியே சென்று வருகின்றனர்.


இப்பகுதியில் மதுக்கடை திறந்தால் பெண்கள், சிறுமிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும். மேலும் தேவையற்ற சண்டை சச்சரவுகள் ஏற்படும் எனவே இப்பகுதியில் மதுக்கடை திறக்க கூடாது என தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies