Type Here to Get Search Results !

மை தருமபுரி அமைப்பின் மூலம் இலக்கியம்பட்டி பஞ்சாயத்து தொடக்கப்பள்ளி‌க்கு கரும்பலகை வண்ணம் பூசப்பட்டது


மை தருமபுரி அமைப்பின் மூலமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளி வகுப்பறை கரும்பலகைக்கு வண்ணம் பூசும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இது குறித்து மை தருமபுரி அமைப்பின் தலைவர் சதிஷ்குமார் கூறுகையில், இந்த திட்டத்தின் மூலம் இன்று இலக்கியம்பட்டி பஞ்சாயத்தில் உள்ள நியூ காலனி, ஏ ஜெட்டிஅள்ளி இரண்டு தொடக்கப்பள்ளி வகுப்பறைகள் கரும்பலகைக்கு கருப்பு வண்ணம் பூசப்பட்டது. 


குழந்தைகளின் கல்வியறிவு மேலும் ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் மை தருமபுரி அமைப்பினரால் தொடரப்பட்டுள்ளது. பல நல்ல உள்ளங்களின் ஆதரவு இந்த திட்டத்திற்கு தேவைப்படுகிறது. ஒருவனுக்கு கல்வி அளிப்பதன் மூலம் அவனது வாழ்க்கை ஒளிரும், கரும்பலகை ஒளிர தாங்கள் உதவ வேண்டி கேட்டுக்கொள்கிறோம், என அவர் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies