Type Here to Get Search Results !

பென்னாகரம் அடுத்த பி அக்ரகாரம் தமிழ்நாடு கிராம வங்கி கிளையில் தொடர் வைப்பு நிதி முகாம் நடைபெற்றது.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பி. அக்ரகாரம்கிளை தமிழ்நாடு கிராம வங்கியில் தொடர் வைப்பு நிதி முகாம் நடைபெற்றது இந்த முகாமில் நூறு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு தொடர் வைப்பு கணக்கு தொடங்கினார்கள்.

மேலும் 18 வயது முதல் 50 வயது வரை பிரதம மந்திரி ஜீவான் பீமா யோஜனா திட்டத்தில் ஆண்டுக்கு 436 ரூபாய் செலுத்தி இறப்பு எந்த வகையில் ஏற்பட்டாலும் ரூபாய் இரண்டு லட்சம் காப்பீட்டு திட்டம் வழங்கப்படும் அதேபோல் 18 வயது முதல் 70 வயது வரை ஆண்டிற்கு ரூபாய் 20 ரூபாய் பிரிமியம் செலுத்தி பிரதம மந்திரி ஜீவன் சுரக்ஷா யோஜனா திட்டத்தின் மூலம் விபத்து ஏற்பட்டால் ரூபாய் இரண்டு லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.


இவ்வாறு இந்த திட்டத்தின் மூலம் ரூபாய் 20 செலுத்தி விபத்தில் இறந்த பழனியம்மாள் என்பவரின் வாரிசு கணேசன் என்பவருக்கு இரண்டு லட்ச ரூபாய் காசோலை வழங்கப்பட்டது இந்த வங்கியில் காப்பீடு திட்டங்களின் பயன்களைப் பற்றியும் கிளை மேலாளர் சந்திரகுமார் துணை மண்டல மேலாளர் ரமேஷ் நிதி சார் கல்வி ஆலோசகர் முருகன் உதவி மேலாளர் வைரமுத்து ஸ்பீடு தொண்டு நிறுவன இயக்குனர் அறிவழகன் ஆகியோர் இந்த முகாமில் கலந்து கொண்ட வாடிக்கையாளர்களுக்கு எடுத்துரைத்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies