Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் அனைத்து வகை மோட்டார் பழுது நீக்குவோர் சங்கம் சார்பில் மே தின விழா கொண்டாட்டம்.


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மே 1 ம் தேதி, சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அனைத்து வகை மோட்டார் பழுது நீக்குவோர் சங்கம் சார்பில்  மே தின விழா கொண்டாட்டம். சங்க தலைவர் சண்முகம்   தலைமையில் நடைப்பெற்றது. முன்னதாக பேரூராட்சி முன்பாக உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து சங்க கொடியேற்றி, பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில்  சங்க செயலாளர் மாது , பொருளாளர் ராஜவேல், துணை செயலாளர் சாதிக்,  துணை பொருளாளர் சின்னசாமி, செயற்குழு உறுப்பிணர்கள், பொதுக்குழு உறுப்பிணர்கள், நிர்வாகிகள் , தொழிலாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies