Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு தச்சு தொழிலாளர் சங்கம் சார்பில் மே தின விழா கொண்டாட்டம்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மே 1 ம் தேதி, சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தச்சு தொழிலாளர் சங்கம் சார்பில் மே தின விழா கொண்டாட்டம். சங்க தலைவர் ராஜா  தலைமையில் நடைப்பெற்றது. முன்னதாக ஸ்ரீ திரெளபதியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர். அதனை தொடர்ந்து சங்க கொடியேற்றி, பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.


இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு சங்க செயலாளர் சரவணன், பொருளாளர் முருகன், துணை செயலாளர் பெரியசாமி,  துணைத் தலைவர் முருகன், செயற்குழு உறுப்பிணர்கள், பொதுக்குழு உறுப்பிணர்கள், நிர்வாகிகள் , தொழிலாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies