Type Here to Get Search Results !

மை தருமபுரி அமரர் சேவை மூலம் 87 ஆவது புனித உடல் நல்லடக்கம்.


மை தருமபுரி அமரர் சேவை மூலம் 87 ஆவது ஆதரவற்றவரின் உடல் நல்லடக்கம் செய்தனர், இது குறித்து, மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் சதீஷ்குமார் கூறுகையில், தருமபுரி மாவட்டம் தொப்பூர் வனப்பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதை அடுத்து காவல்துறை உதவியுடன் உடலை மீட்டு விசாரித்ததில் இவரை பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்கப்பெறவில்லை. 


உறவினர்கள் இன்றி இறந்த இவரது புனித உடலை தொப்பூர் காவல் நிலைய காவலர் செல்வகுமார், மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், நிறுவனராகிய நான் மற்றும் ராஜா ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தோம், இதுவரை மை தருமபுரி அமரர் சேவை மூலம் 87 புனித உடல்கள் நல்லடக்கம் செய்துள்ளோம். மரணிப்பவர்களிடமும் மனிதநேயம் பகிர்வோம். என்றென்றும் மனிதநேயமிக்க சேவையில் மை தருமபுரி அமைப்பினர், என கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies