Type Here to Get Search Results !

பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, தமிழ் மாநில கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் மே தின விழா கொண்டாட்டம்.


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மே 1 ம் தேதி, சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமிழ் மாநில கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில்  மே தின விழா கொண்டாட்டம் சங்க ஆலோசகர்கள்  கோவிந்தசாமி, சிவராஜ் தலைமையில் நடைப்பெற்றது.


முன்னதாக ஸ்ரீ திரெளபதியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர். அதனை தொடர்ந்து சங்க கொடியேற்றி, பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.


இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு சங்க தலைவர் கணேசன், செயலாளர் இடும்பன், பொருளாளர் சண்முகம், செயற்குழு உறுப்பிணர்கள் , நிர்வாகிகள் , தொழிலாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies