Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் மே -1 சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, இருசக்கர வாகன பழுது நீக்குவோர் நல சங்கம் சார்பில் உழைப்பாளர் தின விழா இனிப்பு வழங்கி வெகு விமர்சையாக கொண்டாட்டம்.


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மே 1 ம் தேதி, சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இரு சக்கர வாகன பழுது நீக்குவோர் நல  சங்கம் சார்பில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மே தின விழா  கொண்டாட்டம் சங்க தலைவர் மற்றும் மாநில துணை பொது செயலாளர் வடிவேல்  தலைமையில் நடைப்பெற்றது.


முன்னதாக  பேரூராட்சி முன்பு உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து சங்க கொடியேற்றி, பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.


இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு சங்க செயலாளர் செல்வராஜ்,  பொருளாளர் மகேந்திரன், துணைத் தலைவர் சங்கரன், துணை செயலாளர் சங்கர், மாநில செயற்குழு உறுப்பிணர்கள் மாதேஷ், ராமகிருஷ்ணன், எலக்ட்டிரிசியன் அசோகன், மற்றும் நிர்வாகிகள் , தொழிலாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் அசைவ உணவு வழங்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies