Type Here to Get Search Results !

பாலக்கோடு MG-ரோடு ஸ்ரீராம் சில்க்ஸ் முன்பு கோடை வெயில் தாக்கம் மற்றும் தீ விபத்து தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, எம்.ஜி. ரோடு, ஸ்ரீராம் சில்க்ஸ் முன்பு கோடை வெயில் தாக்கம் தீ விபத்து தடுப்பு பாதுகாப்பு  விழிப்புணர்வு நிகழ்ச்சி மருத்துவர். பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில்  நடைப்பெற்றது.


பாலக்கோடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் செல்வம், சிறப்பு நிலை அலுவலர் மகேந்திரன் ஆகியோர் கோடை காலங்களில் ஏற்படும்   திடீர் தீவிபத்துக்கள், சமையலறையில் எரிவாயு சிலிண்டர் கசிவால் ஏற்படும் தீ விபத்துக்கள்,  மின்கசிவால் ஏற்படும் தீவிபத்துக்கள் தடுப்பு வழிமுறைகள் குறித்து கடை வாடிக்கையாளர்களுக்கும், ஊழியர்களுக்கும், பொது மக்களுக்கு செயல் விளக்கத்துடன் செய்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் திரளானோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies