தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அம்மா மக்கள் முன்னேற்ற நகர கழகம் சார்பில் பாலக்கோடு தக்காளி மார்க்கெட் முன்பு கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நகர செயலாளர் PC.ஞானம் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது.
இதில் தலைமை நிலைய செயலாளரும், மாவட்ட செயலாளருமான D.K.ராஜேந்திரன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் தர்பூசணி, இளநீர், நீர்மோர், எலுமிச்சை பழம் சாறு, வெள்ளரிக்காய், பனை நுங்கு உள்ளிட்டவைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் முத்துசாமி, மாவட்ட துணை செயலாளர் ஏகநாதன், ஒன்றிய செயலாளர் கணேசன், சிறுபான்மையின மாவட்ட செயலாளர் மசியுல்லா, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் ராஜா, நகர அவைத் தலைவர் இக்பால், நகர துணை செயலாளர் மகேந்திரன் நிர்வாகிகள் ரங்கநாதன், ரகமத்துல்லா, சங்கர், கோவிந்தராஜ், ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.