தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட விளக்க கூட்டம் வேளாண்மை துணை இயக்குநர் குணசேகரன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்திற்க்கு வேளாண்மை உதவி இயக்குநர் அருள்மணி முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் தமிழக அரசு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் மூலம் பாலக்கோடு வட்டாரத்தில் பூகானஅள்ளி, பி.கொல்ல அள்ளி, பாடி, கரகதஅள்ளி, சாமனூர், தண்டுகாரனஅள்ளி ஆகிய 6 ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் உள்ள தரிசு நிலங்களில் உள்ள முட்புதர்களை அகற்றி விளை நிலங்களாக மாற்றும் திட்டம் செயல்படுத்த உள்ளதாகவும் அது குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
இக்கூட்டத்தில் வேளாண்மை அலுவலர் மணிவண்ணன், வனத்துறை, ஊரக உள்ளாட்சி துறை உள்ளிட்ட அதிகாரிகள் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.