தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அண்ணா ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா பாலக்கோடு வட்டார தலைவர் கோவிந்தராஜ் அவர்களின் தலைமையில் நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு வட்டார செயலாளர் பெஞ்சமின் , துணை செயலாளர் வாசு, பொருளாளர் தியாகராஜன், ஆசிரியர் கிறிஸ்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலக்கோடு கல்வி வட்டாரத்திற்க்குட்பட்ட துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வந்த ஆசிரியர்களான பழனியம்மாள், லட்சுமிபதி, அன்பழகன், வசந்தா, கணேசன், சகீலா, ஷானாஸ் பேகம் ஆகியோர் இன்று பணி நிறைவு பெற்றனர்.
பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பாராட்டு விழா நடந்தது. இதில் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி .மாநில பொதுசெயலாளர் தாஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களின் சேவைகளை பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவு பரிசினை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் திருக்குமரன், மாவட்ட தலைவர் பழனியப்பன், மாநில துணைப் பொது செயலாளர் புருசோத்தமன், மாநில மகளிர் அணி செயலாளர் கிருஷ்ணகுமாரி, மாநில துணைத் தலைவர் சிவக்குமார், மற்றும் வட்டார, மாவட்ட, மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.