அரூர் பகுதியை மேம்படுத்த என்னிடம் நிறைய திட்டங்கள் உள்ளது என கூறி வாக்கு சேகரித்தார் சௌமியா அன்புமணி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 9 ஏப்ரல், 2024

அரூர் பகுதியை மேம்படுத்த என்னிடம் நிறைய திட்டங்கள் உள்ளது என கூறி வாக்கு சேகரித்தார் சௌமியா அன்புமணி.


அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செல்லம்பட்டிபுதூர் மாவேரிப்பட்டி பொய்யப்பட்டி பெரியபன்னைமடுவு கைலாயபுரம்  மாம்பட்டி இட்லப்பட்டி கொங்கவேம்பு ஈச்சம்பாடி ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது அவர் பேசுகையில், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கவும் நமது சந்ததிகள் பாதுகாத்திடவும் மற்றும் காவேரி உபரிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் பொதுமக்களின் குடிநீர் பிரச்சனை நிரந்தரமாக தீர்க்கப்படும் கிராம புறங்களில் தரமான சாலை வசதி ஏற்படுத்துவேன்  இந்த பகுதியை மேம்படுத்த என்னிடம் பல திட்டங்கள் உள்ளது என்னை வெற்றி பெற செய்தால் நாடாளுமன்றத்தில் உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றபடும் என கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



இந்நிகழ்ச்சியில் பாமக மாவட்ட செயலாளர் அரசாங்கம்  அமமுக ஆட்சி மன்ற குழு தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான ஆர்.ஆர்.முருகன் ஒன்றிய செயலாளர்கள் கண்ணதாசன் தரணிராஜ் பாஜக அரூர் தொகுதி பொறுப்பாளர்கள்  பிரவின் சாட்சாதிபதி தமாக மாவட்ட தலைவர்  அரவிந்தன் பாமக மாவட்ட தலைவர் அல்லிமுத்து ஒன்றிய செயலாளர் சக்திவேல் சேகர்  அரூர் நகர செயலாளர் பேக்கரிபெருமாள் பேரூராட்சி உறுப்பினர் அன்புமணி ஊடக பேரவை மாவட்ட இணை செயலாளர் வெங்கடேஸ்வரன் நிர்வாகிகள் பேக்கரிபிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad