![]() |
மாதிரி புகைப்படம். |
பென்னாகரம் அருகே உள்ள நாயக்கனூரில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பிற்பகல் முதல் மின்சாரம் இன்றி இப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்
இரவு முழுவதும் மின்சாரம் இன்றி, குழந்தைகளும், முதியவர்களும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் விசாரிக்கும் பொழுது டிரான்ஸ்பார்மர் பழுதடைந்து விட்டதாகவும், அடுத்து மின்சாரம் வழங்க ஒரு வாரம் வரை ஆகும் எனவும் தெரிவித்ததால் இப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இன்று மாலைக்குள் மின்சாரம் வழங்காமல், மின்துறை அதிகாரிகள் மெத்தனம் காட்டினால், போராட்டத்தில் இறங்கப் போவதாகவும் இப்பகுதி இப்போது மக்கள் தெரிவித்துள்ளனர்.
பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ஏரியூர், பெரும்பாலை, ஒகேனக்கல், பாப்பாரப்பட்டி, அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் அறிவிக்கப்படாத தொடர் மின்தடை ஏற்பட்டு வருகிறது. மேலும் தற்போது கோடை காலம் என்பதால் வெப்பம் வாட்டி வதைக்கிறது, தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் அடிக்கிறது. இச் சூழ்நிலையில் தொடரும் மின்தடையால் பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். நாயக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த 24 மணி நேரமாக மின்சாரம் இல்லாமல் இருப்பது, பொது மக்களை கடுமையாக பாதித்துள்ளது.
எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பென்னாகரம் சுற்றுவட்டார பகுதிகளில், மின்தடை ஏற்படா வண்ணம், நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நாயக்கனூருக்கு உடனடியாக மின்சாரம் வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் இப்பகுதி இப்போது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பொது மக்களுக்கு அலட்சியமாக பதில் அளிக்கும் மின்வாரிய அதிகாரிகள் மீது, உயர் அதிகாரிகள், தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக