ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு இரண்டாம் கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளது, காவிரி உபரி நீர் திட்டம் செயல்படுத்தப்படும், ஒகேனக்கல் வரை நான்கு வழி சாலை அமைக்கப்படும், ஒட்டனூர், கோட்டையூர் பாலம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது, ஒகேனக்கல்லில் யானைகள் மறுவாழ்வு முகாம் அமைக்கப்படும், உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டிருப்பது, தொப்பூர் உயர்மட்ட பாலம், தருமபுரி.. மொரப்பூர் ரயில்வே திட்டம், விவசாயகளுக்கான நீர் பாசன திட்டங்கள் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படு்ம், தேர்தலுக்கு தேர்தல் தான் மோடி வந்து செல்வார், வேறு என்ன செய்து விட்டார்.
ஆனால் நமது ஆட்சியில், மகளிர் உரிமை திட்டம், கட்டணமில்லா பேருந்து, புதுமைப்பெண் தி்ட்டம், மாணவர்களுக்கும் இந்த உதவி தொகை வழங்க திட்டமிட்டு வருகிறோம், இந்தியாவிலயே முதன் முறையாக முதலமைச்சரின் காலை உணவு திட்டம், இந்த திட்டத்தை வெளி மாநிலத்தவரும், வெளிநாட்டவரும் பின்பற்றக்கூடிய திட்டமாக இருக்கிறது, இது திராவிட மாடல் அரசு என பேசிய உதயநிதி ஸ்டாலின்.
இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன்,
கியாஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய் வழங்கப்படும்,.
பெட்ரோல் 75 ரூபாயும், டீசல் 65 ரூபாயுக்கு வழங்கப்படும்,
தமிழகம் முழுக்க உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும், என தெரிவித்தார்
பாமக குறித்து பேசும் போது, வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு தந்தவர் கலைஞர்,
சமூகநீதிக்காக எதிராக உள்ள பா ஜ க வுடன் கூட்டணி வைத்திருக்கிறார்களே, சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என ராமதாஸ் கூறி வருகிறார், ஆனால் இதனை மறுத்து வரும் பா ஜ க வுடன் பாமக கூட்டணி வைத்திருக்கிறார்களா,
டிவி ஒன்றிற்கு பேட்டியளித்த ராமதாஸ் பா ஜ க வி்ன் ஆட்சிக்கு பூஜ்ஜியத்திற்கு கீழே எதாவது மதிப்பெண் இருந்தால் தான் கொடுக்கலாம் என்றார்,
தற்போது அதே பாஜகவுடன், பா ம க கூட்டணி சேர்ந்துள்ளது, என்ன காரணத்திற்காக என்பதை மக்கள் நீங்கள் சிந்திக்க வேண்டும் என்றார்..
தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், தேர்தல் நேரத்தில் வந்து செல்வால் மோடி, மதுரையில் எயம்ஸ் மருத்துவமனை கட்டி செல்வதாக செங்கல்லை நட்டு அடிக்கல் நாட்டி சென்றார், அந்த ஒற்றை கல்லயும் நான் புடுங்கி வந்துவுடன், எப்போது தான் மருத்துவமனை கட்ட போகிறீர்கள்,
மோடிக்கு நான் ஒரு பெயர் வைத்திருக்கிறேன், 29 பைசா, அதாவது செல்லாக்காசு, அப்படியே நீங்களும் அப்படியே கூப்புடுகிறீர்களா, மற்ற மாநிலங்களுக்கு கூடுதலாக ஜி எஸ் டி, திருப்பி தருகிறீர்கள், ஆனால் தமிழகத்திறகு 29 பைசா தான் ஒன்றிய அரசு திருப்பி தருகிறார்கள்,
பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு மூன்று மடங்கு பணம் தருகிறார், ஆனால் தமிழகத்திற்கு 29 பைசா தான் தருகிறார்.
சசிகலாவின் கால்களை தவழ்ந்து சென்று, பிடித்து முதலமைச்சரான துரேகத்தி்ன் உருவம் எடப்பாடி பழனிச்சாமி,
இந்தியா கூட்டணியில் போட்டியிட்டுள்ள திமுக வேட்பாளர் ஆ.மணியை மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும்,
மோடியை விரட்டியடிக்க வேண்டும்,
இந்தியாவிக்கே ஒரு விடியல் ஆட்சியை தர வேண்டும் என்றார் உதயநிதிஸ்டாலின்...

