தருமபுரி மேற்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு கோடை வெயில் தாகத்தை தீர்க்க நீர்மோர் பந்தலை தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் அவர்கள் திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியை திமுகவின் பாப்பிரெட்டிப்பட்டி நகர செயலாளர் கோ.ஜெயசந்திரன், ஏற்பாடு செய்தார். இதில் பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் சி.முத்துக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.சித்தார்த்தன், மாநில வர்த்தகர் அணி துணைசெயலார், அ.சத்தியமூர்த்தி, தலைமை கழக பேச்சாளர் இராசு.தமிழ்ச்செல்வன் பேரூராட்சி தலைவர் செங்கல்மாரி மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.