அரூர் அருகே உள்ள மாவேரிப்பட்டி புதூர் பிச்சன்கொட்டாய் உடையானூர் ஆகிய கிராமங்களில் திமுக வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து பேரூராட்சி துணை தலைவர் சூர்யாதனபால், திமுக நகர செயலாளர் முல்லைரவி ஆகியோர் இணைந்து திமுக அரசு செய்த சாதனைகள் கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.
இதில் அக்காட்சியின் நகர துணை செயலாளர் விண்ணரசன், நான்காவது வார்டு கிளை செயலாளர் டைலர் ராஜேந்திரன், ரகுராமன், இளையராஜா, சீனிவாசன், காங்கிரஸ் நகர தலைவர் கணேசன், வாலிபால் தனபால், கவாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

