இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சாந்தி இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து நேற்றிரவு பஞ்சப்பள்ளி போலீசார் பாளையம் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சனத்குமார் ஆற்றின் அருகே 2 டிராக்டரில் ஜே.சி.பி.எந்திரம் மூலம் நொரம்பு மண் கடத்துவது தெரிய வந்தது.
உடனடியாக அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்ததில் பாளையம் கிராமத்தை சேர்ந்த டிராக்டர் டிரைவர் சேகர் (வயது. 52) கொக்கிகல் கிராமத்தை சேர்ந்த டிராக்டர் உரிமையாளர் முருகன் (வயது.40), பாலானம்பட்டியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் சுகந்திரன் (வயது.28), பஞ்சப் பள்ளியை சேர்ந்த ஜே.சி.பி.டிரைவர் கிரி (வயது. 20) என்பது தெரிய வந்தது.
4 பேரையும் கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய 40 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 2 டிராக்டர்கள் மற்றும் ஜே.சி.பி,யை பறிமுதல் செய்தனர்.

