தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கான பயிற்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் பென்னாகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமைதாங்கினார். இந்தக் கூட்டத்தில் வாக்குப்பதிவு அன்று பூத்துக்கு செல்லும் போலீசார் உரிய நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
பொது மக்களை கண்ணியமாக அணுக வேண்டும். தேர்தல் பறக்கும் படையினருடன் வாகன சோதனைகளை துரிதிப்படுத்த வேண்டும். தேர்தலுக்காக பயன்படுத்தக்கூடிய மொபைல் வாகனங்களில் பணிபுரியும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பூத்துகளில் விரைந்து சென்று எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
இதில் கூடுதல் சூப்பிரண்டு இளங்கோவன், பென்னாகரம் போலீஸ் துணை சூப்பிரண்டு மகாலட்சுமி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக