அரூரில் ரம்ஜான் கொண்டாட்டம்.
ஏப்ரல் 11, 2024
0
ரம்ஜான் மாதநோன்பு முடிந்த நிலையில் உலகெங்கிலும் ரம்ஜான் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகை செய்தனர். அரூரில் அரசு மகளிர் பள்ளி மைதானத்தில் நடந்த ரம்ஜான் நிகழ்ச்சியில் முத்தவல்லி சபீர்அகமது தலைமையில் நடைப்பெற்ற சிறப்பு தொழுகையில் நுாற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்று தொழுதனர் பின்னர் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
Tags

