பென்னாகரம் அருகே ஏரியூர் பகுதியில் மத்திய பாதுகாப்பு படை மற்றும் காவல் துறையினர் தேர்தல் விழிப்புணர்வு அணிவகுப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 12 ஏப்ரல், 2024

பென்னாகரம் அருகே ஏரியூர் பகுதியில் மத்திய பாதுகாப்பு படை மற்றும் காவல் துறையினர் தேர்தல் விழிப்புணர்வு அணிவகுப்பு.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர், நெருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில், நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் காவல்துறையினர் தேர்தல் விழிப்புணர்வு அணிவகுப்பு நடத்தினர். 


நெருப்பூர் கடை வீதியில் தொடங்கிய அணிவகுப்பு, கடைவீதி,  பேருந்து நிலையம், வழியாக, மாரியம்மன் கோவில் வரை அணிவகுப்பு நடத்தினர்.


தொடர்ந்து ஏரியூர் காவல் நிலையத்தில் தொடங்கிய அனைவருக்கும் அரசு மருத்துவமனை பேருந்து நிலையம் கடைவீதி வழியாக நடைபெற்ற அணிவகுப்பு அரசு துவக்கப்பள்ளி அருகே நிறைவு பெற்றது.


இந்த அணி வகுப்பில் பென்னாகரம் தேர்தல் அதிகாரிகள், பென்னாகரம் தாசில்தார், ஏரியூர் தாசில்தார்கள் மற்றும் ஏரியூர் காவல் ஆய்வாளர் மற்றும் பென்னாகரம் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad