Type Here to Get Search Results !

பாஜக கூட்டணி கடவுள்பாதி மிருகம் பாதி போன்று உள்ளது - உ.வாசுகி


தமிழகத்தில் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என மார்க்சிஸ்ட் கம்யூ.கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்தார்.


தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து அரூரில் மார்க்சிஸ்ட் கம்யூ.கட்சி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில்  ஒன்றிய செயலர் பி.குமார் தலைமை வகித்தார்.


இந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ.கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி பேசியதாவது :


தமிழகத்தில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதிகள், மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகளால் தமிழகத்தில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சியானது இந்தியாவில் பிற மாநிலங்களில் முன்மாதிரியாக உள்ளது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறைகளை கையில் வைத்துக்கொண்டு மாநில அரசுகளை மிரட்டி வருகிறது.


பாஜக தலைமையிலான மத்திய அரசு உரிய நிதி ஒதுக்கீடு வழங்காமல் தமிழகத்தை வஞ்சிக்கிறது பாமக நான்கு முறை எம்பியாக இருந்தும் இந்த மாவட்டத்திற்கு ஏதும் செய்யவில்லை அண்ணாமலை எங்கள் கூட்டணி வலுவான கூட்டணி என்கிறார் ஆனால் அந்த கூட்டணி கடவுள்பாதி மிருகம் பாதியாக உள்ளது தாமரை தமிழக மண்ணில் மலராது விஷ செடிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை இந்தியா கூட்டணி கொள்கை சார்ந்த கூட்டணி இக்கூட்டணி வெற்றிபெற அயராது உழைத்து பாஜகவுக்கு சாவுமணி அடிக்கவேண்டும் என்றார்.


இதில் திமுக மேற்கு மாவட்ட செயலர் பி.பழனியப்பன், மார்க்சிஸ்ட் கம்யூ.கட்சி மாவட்ட செயலர் ஏ.குமார் விசிக மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா சிபிஐ தமிழ்குமரன் அரூர் பேரூராட்சி துணை தலைவர் சூர்யாதனபால் நகர செயலாளர் முல்லைரவி   உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies