Type Here to Get Search Results !

மலைக்கிராமங்களில் குடிநீர் பிரச்சினையை முழுமையாக நிறைவேற்றுவேன்- தர்மபுரி நாடாளுமன்ற வேட்பாளர் ஆர்.அசோகன் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு.


தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.அசோகன்  அவர்கள்  காரிமங்கலம் அருகே உள்ள மலைகிராமங்களான தண்டுகாரஹள்ளி, வெள்ளிச்சந்தை, பிக்கனஹள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இரட்டை இலை சின்னத்திற்க்கு பொது மக்களிடம்  வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது பேசிய வேட்பாளர் தாலிக்கு தங்கம், பள்ளி மாணவர்களுக்கு  மடிகணிணி வழங்குதல், கர்ப்பிணி பெண்களுக்கு 18 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக அரசு நிறுத்தியுள்ளது, என கூறியவர், தொடர்ந்து மக்கள் பணியாற்றி வரும் அதிமுகவிற்க்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து டாக்டர் .அசோகனை வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அது சமயம்  கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies