100% சதவீதம் வாக்களிப்பது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டு, கோலாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.
பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024ஐ முன்னிட்டு, பென்னாகரம் வட்டம், பெரியூர் கிராமத்தில் நடைபெற்ற தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் இன்று (08.04.2024) மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் அனைத்து வீடுகளின் வாசல்களில் மாக்கோலம் இட்டு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைத்து வீடுகளுக்கும் சென்று வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பிதழ் கொடுத்து அனைவரையும் 100% வாக்களிக்க வருமாறு அழைப்பு விடுத்தார்கள்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி, தருமபுரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதியிலும் பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள், முதல்முறை வாக்களர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட முழுவதும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் மூலம் துண்டு பிரசுரங்கள் வழங்குதல், ஒட்டுவில்லைகளை வழங்குதல், விழிப்புணர்வு பேரணி மற்றும் மனித சங்கிலி நடத்துதல், தேர்தல் விழிப்புணர்வு சிலம்பாட்டம், ஒயிலாட்டம், மனித சங்கிலி, கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
அதன் அடிப்படையில் இன்றைய தினம் பெரியூர் கிராமத்தில் நடைபெற்ற தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் அனைத்து வீடுகளின் வாசல்களில் மாக்கோலம் இட்டு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைத்து வீடுகளுக்கும் வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பிதழ் கொடுத்து அனைவரையும் 100% வாக்களிக்க வருமாறு அழைப்பு விடுத்தார்கள்.
மேலும், 100% சதவீதம் வாக்களிப்பது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டு, கோலாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து திருமல்வாடி ஊரட்சி ஒன்றிய தொடங்கப்பள்ளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தேர்தல் நடைபெறும் நாளன்று வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாகவும், அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சார வசதி, கழிப்பறை வசதி, மாற்றுதிறனாளிகள் மற்றும் வயதானவர்கள் வாக்களிக்க சாய்வுதளம் போன்றவைகள் தயார்நிலையில் வைக்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் Sveep Activities பொறுப்பு அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், பென்னாகரம் தொகுதி தேர்தல் கண்காணிப்பு அலுவலர் திருமதி.பூங்கோதை, மகளிர் திட்ட இயக்குனர் திரு. பத்ஹூ முகம்மது நசீர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி. செ.நர்மதா, பென்னாகரம் வட்டாட்சியர் திரு.ஜெ.சுகுமார், உதவி திட்ட அலுவலர்கள் திரு.முருகேசன், திரு.சஞ்சய்குமார், திருமதி.சந்தோசம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், தன்னார்வலர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

.jpg)