தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அடுத்த தொட்டதிம்மனஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவாஜிராவ் (வயது.45) இவர், விவசாய பயிருக்கு அடிப்பதற்க்கு பூச்சிக்கொல்லி மருந்து வாங்க பஞ்சப்பள்ளி வந்தவர் பூச்சிகொல்லி மருந்து வாங்கி கொண்டு மீண்டும் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்க்கு சென்று கொண்டிருந்தார்.
பாளையம் 4 ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த சொகுசு கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது, இதில் சிவாஜிராவ் பலத்த காயமடைந்தார், உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து சிவாஜிராவ் கொடுத்த புகாரின் பேரில் பஞ்சப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

