Type Here to Get Search Results !

தருமபுரி அடுத்த தம்மனம்பட்டி அருகே எம்பிரானஅள்ளி ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் காவடி ஆலய மகா கும்பாபிஷேகம்.


தருமபுரி அடுத்த தம்மனம்பட்டி அருகே எம்பிரானஅள்ளியில்பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் காவடி  ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவானது கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது அதனைத் தொடர்ந்து கங்கணம் கட்டுதல் கணபதி பூஜை நவகிரக யாகம் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக தீர்த்த குடம் எடுக்கப்பட்டது விழாவின் முக்கிய நாளான இன்று ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட தீர்த்தக் கூடங்களை சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்று கோபுர கலசத்திற்கு புனித நீரானது ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. 

பின்னர் இந்த புனித நீரானது பக்தர்களுக்கு தீர்த்தமாக தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு விழா குழு சார்பிலும் ஊர் பொதுமக்கள் சார்பிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies