கம்பைநல்லூரில் துணிகரம் 200 ரூபாய்க்கு சில்லரைக் கேட்டு 15 பவுன் நகை திருட்டு பட்டப்பகலில் வாலிபர்கள் கைவரிசை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 27 ஏப்ரல், 2024

கம்பைநல்லூரில் துணிகரம் 200 ரூபாய்க்கு சில்லரைக் கேட்டு 15 பவுன் நகை திருட்டு பட்டப்பகலில் வாலிபர்கள் கைவரிசை.


கம்பைநல்லூரில் உள்ள நகைக்கடையில் 200க்கு சில்லரைகேட்டு பட்டப்பகலில் 15 பவுன் நகையை மர்மநபர்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 


தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கம்பைநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (44)இவர் அங்குள்ள சுப்பிரமணியர் கோயில் தெருவில் கடந்த 20 வருடங்களாக நகைக்கடை நடத்தி வருகிறார் மதிய உணவிற்காக தனது வீட்டிற்கு செல்லும்போது அவரது மகன் கடையை கவனித்துக் கொள்வது வழக்கம் கடந்த 16ஆம் தேதி வழக்கம் போல் மதிய உணவிற்காக கணேசன் தனது வீட்டிற்கு சென்ற சமயத்தில் அவரது மகன் கடையில் இருந்தார் உணவருந்தி விட்டு மீண்டும் கடைக்கு திரும்பினார்  அப்போது நகைகளை சரிபார்த்த போது 15 பவுன் மாயமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.


இது குறித்து தனது மகனிடம் கேட்டபோது தனக்கு ஒன்றும் தெரியாது என தெரிவித்தார் இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தார் அதில்  கணேசன் சாப்பிடுவதற்காக சென்றிருந்தபோது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் கடைக்கு வந்து சென்றது தெரியவந்தது.


அவர்கள் கடையில் இருந்த கணேசன் மகனிடம் 200க்கு  சில்லரை கேட்டுள்ளனர் சில்லறையை எடுத்து எண்ணிக் கொண்டிருந்தபோது பணப்பெட்டியில் இருந்த 49 மோதிரங்கள் 4 தோடு உள்ளிட்ட 15 பவுன் (சுமார் 125 கிராம்)தங்க நகையை நைசாக திருடிய அவர்கள் சில்லறையை வாங்கிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்வது பதிவாகி இருந்தது அவர்களை கண்டுபிடித்து நகைகளை மீட்டுதரும்படி கணேசன் கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.


இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சில்லரைகேட்டு நாடகம் ஆடி நகையை திருடி சென்ற இரண்டு மர்ம நபர்கள் குறித்து போலிசார்  விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.