சொத்து குவிப்பு வழக்கு; நீதிமன்றத்தில் ஆஜரானார் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 26 ஏப்ரல், 2024

சொத்து குவிப்பு வழக்கு; நீதிமன்றத்தில் ஆஜரானார் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்.


அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்  வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதில் ரூ.45 கோடியே 20 இலட்சம் மதிப்பிலான சொத்து தொடர்பான இந்த வழக்கில் கே.பி.அன்பழகன், அவர் மனைவி மல்லிகா, மகன்கள் சசி மோகன், சந்திர மோகன் மற்றும் உறவினர்கள் என 11 நபர்களின் பெயர்கள் சேர்க்கபட்டிருந்தது.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2023 மே மாதம் 22-ம் தேதி காவல் துறையினர் தருமபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை 2023 ஜூலை 13-ம் தேதி தொடங்கி விசாரணை நடைபெற்று வருகிறது, இன்று நடைபெற்ற விசாரணையில் கே.பி.அன்பழகன் உள்ளிட்ட 8 பேர் தருமபுரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர், கேபி அன்பழகனின்  மனைவி மல்லிகா மற்றும் உனவினர்கள்  உள்ளிட்ட மூன்று பேர் ஆஜராக வில்லை. வழக்கின் விசாரணை மீண்டும் ஜுன் 10 ம் தேதி நடைபெற இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.