விளையாட்டு விடுதி / முதன்மை நிலை விளையாட்டு மையம் / சிறப்பு விளையாட்டு விடுதிகளுக்கான தேர்வு போட்டிகள் – விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது - மாவட்ட ஆட்சியர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 26 ஏப்ரல், 2024

விளையாட்டு விடுதி / முதன்மை நிலை விளையாட்டு மையம் / சிறப்பு விளையாட்டு விடுதிகளுக்கான தேர்வு போட்டிகள் – விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது - மாவட்ட ஆட்சியர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர் விளையாட்டுத்துறையில் சாதனைகளட புரிவதற்கேற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் (CoE), விளையாட்டு விடுதிகள் (SH) மற்றும் சிறப்பு விளையாட்டு விடுதிகள் (SHE)  பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 


2024-2025ஆம் ஆண்டிற்கான முதன்மை நிலை விளையாட்டு மையம், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் மேற்குறிப்பிட்டுள்ள விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கான தேர்வுகள் குறித்த விளக்கம் கீழ்க்கண்டவாறு: 


 முதன்மை நிலை விளையாட்டு மையம் (CoE)  - (6th, 7th & 8th Std).

தடகள (ஆண்கள் மற்றும் பெண்கள்), குத்துச்சண்டை (ஆண்கள் மற்றும் பெண்கள்) மேசைப்பந்து (ஆண்கள் மற்றும் பெண்கள்) டேக்வாண்டோ (ஆண்கள் மற்றும் பெண்கள்) பளுதூக்குதல் (ஆண்கள் மட்டும்) ஆகிய விளையாட்டுக்களுக்கு ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், சென்னையிலும் இறகுபந்து (ஆண்கள் மற்றும் பெண்கள்) வில்வித்தை (ஆண்கள் மற்றும் பெண்கள்) ஆகிய விளையாட்டுக்களுக்கு நேரு பூங்கா விளையாட்டரங்கம், சென்னையிலும், ஜிம்னாஸ்டிக்ஸ் (ஆண்கள் மற்றும் பெண்கள்), நீச்சல் (ஆண்கள் மற்றும் பெண்கள்) ஆகிய விளையாட்டுக்களுக்கு வேளச்சேரி நீச்சல்குள வளாகம் சென்னையிலும் டென்னிஸ் (ஆண்கள் மற்றும் பெண்கள்) விளையாட்டிற்கு நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டரங்கம், சென்னையிலும், சைக்கிளிங் (ஆண்கள் மற்றும் பெண்கள்) விளையாட்டிற்கு தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகம் மேலகோட்டையூர், செங்கல்பட்டிலும் நடைபெறவுள்ளது. மேற்காண் இடங்களில் தேர்வு போட்டிகள் 07.05.2024 அன்று நடைபெறவுள்ளது. கலந்து கொள்ளும் வீரர் வீராங்கனைகள் காலை 7.00 மணிக்கு ஆஜராக வேண்டும். 


 விளையாட்டு விடுதி (Sports Hostel) – (7th, 8th,, 9th & 11th Std).

தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து, ஹாக்கி, கபாடி, கையுந்துபந்து ஆகிய விளையாட்டு விளையாட்டுக்களுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும், கிரிக்கெட் மற்றும் நீச்சல் ஆகிய விளையாட்டுக்களுக்கு ஆண்களுக்கு மட்டும்  மாவட்ட அளவிலான விளையாட்டுவிடுதி தேர்வு போட்டிகள் அனைத்து மாவட்ட விளையாட்டரங்கங்களிலும் 10.05.2024 அன்று ஆண்களுக்கும், 11.05.2024 அன்று பெண்களுக்கும் நடைபெறவுள்ளது. கலந்து கொள்ளும் வீரர் வீராங்கனைகள் காலை 7.00 மணிக்கு ஆஜராக வேண்டும். 


விளையாட்டு விடுதி மாநில அளவிலான நேரடி தேர்வு (Sports Hostel – State Level Direct Selection)   (7th, 8th,, 9th & 11th Std).

குத்துச்சண்டை, வாள்வீச்சு, ஜுடோ, பளுதூக்குதல் ஆகிய விளையாட்டில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கும், ஸ்குவாஷ் விளையாட்டில் ஆண்களுக்கு மட்டும் ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், சென்னையிலும், டேக்வாண்டோ விளையாட்டில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மாவட்ட விளையாட்டரங்கம், கடலூரிலும், மல்லர்கம்பம் விளையாட்டில் ஆண்களுக்கு மாவட்ட விளையாட்டரங்கம், விழுப்புரத்திலும், மல்யுத்தம் மற்றும் வுசு ஆகிய விளையாட்டில் ஆண்களுக்கு மட்டும் மாவட்ட விளையாட்டரங்கம், திருச்சியிலும் நேரடியாக மாநில அளவிலான தேர்வு போட்டிகள் நடைபெறவுள்ளது. போட்டியில் கலந்து கொள்ளும் ஆண்கள் 13.05.2024 அன்றும் பெண்கள் 14.05.2024 அன்றும் காலை 7.00 மணிக்கு மேற்காண் இடங்களில் ஆஜராக வேண்டும். 


சிறப்பு நிலை விளையாட்டு விடுதி (SHE) (கல்லூரி மாணவ, மாணவியர்க்கான).

தடகளம், குத்துச்சண்டை, கபாடி மற்றும் பளுதூக்குதல் ஆகிய விளையாட்டில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், சென்னையில் 06.05.2024 அன்றும், கூடைப்பந்து, கையுந்துபந்து, கைப்பந்து, கால்பந்து ஆகிய விளையாட்டுக்களில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கும், வாள் வீச்சு விளையாட்டில் ஆண்களுக்கு மட்டும் நேரு உள் விளையாட்டரங்கம், சென்னையில் 06.05.2024 அன்றும், ஹாக்கி விளையாட்டில் மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கில் 06.05.2024 அன்றும், நீச்சல் விளையாட்டில் பெண்களுக்கு மட்டும் வேளச்சேரி நீச்சல்குள வளாகம், சென்னையில் 06.05.2024 அன்றும் தேர்வு போட்டிகள் நடைபெறவுள்ளது. 


மேலும் மாவட்ட அளவிலான தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்கள் மாநில அளவிலான தேர்வுக்கு தகுதி பெறுவர். அதன் விவரம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in எனும் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். மேற்குறிப்பிட்டுள்ள விளையாட்டுக்களில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் உள்ள மாணவ / மாணவியர்கள் விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப படிவம் 26.04.2024 முதல் www.sdat.tn.gov.in மற்றும் tntalent.sdat.in என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  ஆன்லைன் விண்ணப்பத்தினைப் பதிவேற்றம் குறித்த விவரம் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விளையாட்டு விடுதி விவரம்

ஆன்லைன் மூலம் பதிவேற்றம்

செய்ய கடைசி நாள்

சிறப்பு நிலை விளையாட்டு விடுதி (SHE)

05.05.2024 / மாலை 5.00 மணி

முதன்மை நிலை விளையாட்டு மையம் (CoE)

06.05.2024 / மாலை 5.00 மணி

விளையாட்டு விடுதி (SH)

08.05.2024 / மாலை 5.00 மணி


குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு ஆன்லைன் விண்ணப்பம் பூர்த்தி செய்ய இயலாது. ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் மற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும்.  மேலும் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மைய அலைப்பேசி 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரம் பெறலாம். ஆடுகள தகவல் மையத்தின் பணி நேரம் காலை - 10:00 மணி முதல் மாலை - 5:45 வரை தேர்வு போட்டியில் கலந்து கொள்ள வருகின்றவர்களுக்கு பயணப்படியோ, தினப்படியோ (TA/DA) வழங்கப்படமாட்டாது. 


எனவே தருமபுரி மாவட்டத்திலுள்ள பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி விளையாட்டு விடுதி, முதன்மை நிலை விளையாட்டு மையம், சிறப்பு விளையாட்டு விடுதிகளில் சேர்ந்து தங்கள் விளையாட்டுத்திறனை மேம்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.