தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளான பேளாரஅள்ளி, கடமடை, மூங்கப்பட்டி, கரகூர், பெலமாரனஅள்ளி, மாரண்டஅள்ளி பஞ்சப்பள்ளி ஆகிய கிராமங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தர்மபுரி நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் பாமகவை சேர்ந்த செளமியா அன்புமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்,
அப்போது பேசிய அவர் தான் வெற்றி பெற்றால் பாலக்கோடு பகுதியில் தக்காளி கூல் தயாரிக்கும் தொழிற்சாலை, மற்றும் நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்துவதாக உறுதி கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
இந்நிகழ்ச்சியின் போது ஜி.கே.மணி எம்.எல்.ஏ, வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. பாமக மாநில துணைத் தலைவர் பாடி செல்வம், மாவட்ட அமைப்பு தலைவர் கிருஷ்ணன், பிரகாஷ், நகர தலைவர் ராஜசேகர் மற்றும் பாஜக, அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக