பாலக்கோடு பேருந்து நிலையத்தில் திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 2 ஏப்ரல், 2024

பாலக்கோடு பேருந்து நிலையத்தில் திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ.


பாலக்கோடு பேருந்து நிலையத்தில் திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ வருகிற 19 ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கூட்டணி சார்பில் தருமபுரி தொகுதியில் திமுக சார்பில் வழக்கறிஞர் ஆ.மணி போட்டியிடுகிறார். 


அதனை தொடர்ந்து திமுகவினர் மாவட்டம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாலக்கோடு பேருந்து நிலையம், ஸ்தூபி மைதானம் உள்ளிட்ட   நகர பகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி, சாலையில் நின்று கொண்டிருந்த பெண்களிடம் வாக்குகளை சேகரித்தும், முதியோர்களின் காலில் விழுந்தும் ஆசிர்வாதம் பெற்று தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


அதனை தொடர்ந்து வேட்பாளருக்கு ஆதரவாக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. வாக்கு சேகரிப்பில் ஈடபட்டார், அப்போது தமிழக முதல்வர் பெண்களுக்கு உரிமை தொகை,  முதியோர் உதவி தொகை,  பேருந்தில் இலவச பயணம், கல்லூரி பெண்களுக்கு உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை கொடுத்துள்ளார். மேலும் பேசிய அவர் பாஜக ஆட்சியில் 15 இலட்சம் அணைவரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என கூறினர், ஆனால் நிறைவேற்றவில்லை, பெட்ரோல் டீசல் விலை, கேஸ் சிலிண்டர் விலை பாதியாக குறைக்கப்படும் என கூறினர்.


ஆண்டிற்க்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவோம் என கூறினர், இதை எதையுமே செயல்படுத்தப்படவில்லை இவர்களுக்கு துணையாக இருந்தது அதிமுக எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, அதிமுகவிற்க்கு பாடம் புகட்டவும், மீண்டும் ஸ்டாலின் ஆட்சி நிலைக்கவும்,  உதய உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.


இந்நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன், பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி, திமுக மாவட்ட பொருளாளர் முருகன், ஒன்றிய செயலாளர் எம்.வீ.டி. கோபால், அரசு வழக்கறிஞர் பி.கே.முருகன் உள்ளிட்ட கட்சி தொண்டர்கள், கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

-->