தருமபுரி - பாலக்கோடு வழித்தடத்தில் தினந்தோறும் 200க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் இயங்கும் பேருந்துகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்வதாக தொடர்ந்து மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் சென்றன.
மாவட்ட ஆட்சியரின் சாந்தி அவர்களின் உத்தரவின் பேரில் பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி சோமனஅள்ளி பைபாஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார், அப்போது தர்மபுரியிலிருந்து பாலக்கோடு நோக்கி வந்த தனியார் பேருந்தை நிறுத்தி பயணிகளின் பயண சீட்டை சோதனை செய்ததில் அரசு நிர்ணயித் கட்டணத்தை விட கூடுதாக 2 முதல் 5 ரூபாய் வரை வசூலித்தது தெரிய வந்தது.
இதையடுத்து பேருந்திற்க்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்த மோட்டார் வாகன ஆய்வாளர், மீண்டும் இது போல் நடந்தால் பர்மிட் ரத்து செய்யப்படும் என எச்சரித்து பேருந்தை அனுப்பி வைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக