பென்னாகரம் இந்தியன் பேங்க் அருகே இருந்து தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சௌமியா அன்புமணி அவர்களை ஆதரித்து அவரது மகள்கள் சங்கமித்ரா, சங்யுத்தா பிரச்சாரம்.
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பாமகவை சேர்ந்த செளமியா அன்புமணி போட்டியிடுகிறார். செளமியா அன்புமணியை ஆதரித்து, அவரது மகள்கள் சங்கமித்ரா, சங்யுத்தா ஆகியோர், பென்னாகரம் வாரச்சந்தை, கடைவீதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரத்தின் முக்கிய பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
வாரச்சந்தை மற்றும் நகரத்தின் முக்கிய பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு மாம்பழம் சின்னத்திற்க்கு வாக்கு சேகரித்தனர். பிரச்சாரத்தின் போது பாமக நிர்வாகிகளும், கூட்டணி கட்சி நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.