நாம் தமிழர் கட்சி, பென்னாகரம் தொகுதி செயலாளர் கோபி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாநிலக் கொள்கை பரப்புச் செயலாளர் ஜெயசீலன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜெயசீலன், கடந்த 56 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சி காலத்தில், தமிழகம் தனது மொழியை இழந்துவிட்டது, பண்பாட்டை இழந்துவிட்டது, கலாச்சாரத்தை இழந்து விட்டது, மண்ணின் பெருமையை இழந்துவிட்டது. இன்னும் இருப்பது தமிழர்களின் உயிர் மட்டும் தான், எனவே இழந்தவைகளை மீட்க, நாம் தமிழர் கட்சி மட்டுமே போராடி வருகிறது. என தெரிவித்தார்.
மேலும் காவிரியையும் இழந்து விட்டோம், முல்லைப் பெரியாறையும் இழந்து விட்டோம், நீட் தேர்வில் நமது உரிமையை இழந்து விட்டோம், வேலைவாய்ப்பிலும் நமது உரிமையை இழந்து விட்டோம், எல்லாவற்றையும் இழந்து விட்டு இன்று நாதியற்ற இனமாக தமிழினம் உள்ளது என பேசினார்.
அதனைத் தொடர்ந்து வேட்பாளர் அபிநயா பொன்னிவளவன் உரையாற்றினார், அவர், கடந்த 56 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகள் தமிழர்களுக்கு ஏமாற்றத்தை மட்டுமே பரிசாக வழங்கி உள்ளது. குறிப்பாக தர்மபுரி மாவட்டம் பின்தங்கிய மாவட்டமாகவும், கல்வி அறிவிலும், பொருளாதாரத்திலும் மிகவும் வரட்சியான மாவட்டமாகவும் மட்டுமே உள்ளது.
பாமக பாஜக கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி திமுக காங்கிரஸ் கூட்டணி தமிழினத்தை அழித்த கூட்டணி ஜாதி மத பேதமற்ற அரசு அமைய எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என பேசினார். மேலும் பாமக வேட்பாளர் சௌமியா அன்பு மணியுடன் ஒரே மேடையில் விவாதம் செய்ய தயார் எனவும் சூலூரைத்தார்.
இந்தக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் பென்னாகரம் தொகுதி தலைவர் சரவணன், பென்னாகரம் தொகுதி பொருளாளர் ஸ்ரீ பெருமாள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக