தேசிய முற்போக்கு கூட்டணியில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மொரப்பூர் அரூர் பகுதிகளில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி படித்தவர் பண்புள்ளவர் அனைவரிடத்திலும் எளிமையாக பழகக் கூடியவர் பெண்களுக்காக குரல் கொடுப்பவர் ஆகையால் அவரை ஆதரித்து வெற்றி பெறச் செய்யுங்கள், மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனை வேலை வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறது நீங்கள் ஆதரித்து வெற்றி பெறச் செய்தால் காவிரி உபரி நீர் திட்டம் தென்பெண்ணை உபரி நீர் திட்டம் செயல்படுத்தப்படும் இதனால் மாவட்டத்தில் விவசாயம் குடிநீர் பஞ்சம் இல்லாமல் இருக்கும் தொழிற்சாலைகள் அமைத்து வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் கடந்த 57 ஆண்டுகளாக தமிழகத்தை திமுக மற்றும் அதிமுக ஆட்சியாளர்கள் ஆண்டு வந்த நிலையில் இன்னமும் வேலை வாய்ப்பு உருவாக்க முடியவில்லை தண்ணீர் பஞ்சம் போகவில்லை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியவில்லை தொழிற்சாலைகள் கொண்டு வரவில்லை என தெரிவித்தார் அதற்காக நாம் புதிய கூட்டணியை உருவாக்கி மாவட்டத்தை செழுமை செய்ய வேண்டும்.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் புதிய கூட்டணியை உருவாக்கி தமிழகத்தில் ஆட்சிப்பொறுப்பு ஏற்று இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக உருவாக்க முடியும் அதற்கான திட்டங்கள் தன்னிடத்தில் உள்ளது இதற்கான முன்னோட்டம் தான் இந்த நாடாளுமன்ற தேர்தல் இந்த தேர்தலில் நீங்கள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியை ஆதரித்து மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இது தேசியத் தேர்தல். அதிமுக தேசிய கட்சியுடன் கூட்டணியில் இல்லை அதிமுக வாக்காளர்களுக்கு திமுகவின் மீது மட்டுமே கோபம் ஆகையால் அதிமுக தொண்டர்கள் அனைவரும் பாமகவிற்கு வாக்களியுங்கள் அப்படி வாக்களிப்பதன் மூலம் திமுக தோல்வியை தழுவும். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாமக வெற்றி பெற்றால் மாவட்டத்தில் நீர் மேலாண்மை திட்டங்கள் கொண்டு வந்து மாவட்ட மக்கள் வளர்ச்சிக்கு அயராது பாடுபடுவோம் என தெரிவித்தார்.
இதில் அமமுக மாநில ஆட்சி மன்ற குழு தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான ஆர்ஆர்.முருகன் பாமக மாவட்ட செயலாளர் அரசாங்கம் பாஜக பிரவின் மற்றும் பாமக மாவட்ட தலைவர் அல்லிமுத்து நகரசெயலாளர் பேக்கரிபெருமாள் ஒன்றிய தலைவர் சக்திவேல் பழனி அமமுக ஒன்றிய செயலாளர்கள் கண்ணதாசன் தரணிராஜ் பாஜக நகர தலைவர் ஜெயக்குமார் விவேகானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக