தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி, பாலக்கோடு தாசில்தார் அலுவல்கத்தில் அனைத்து கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் நடைப்பெற்றது. அப்போது நடைப்பெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணியினை மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்கள் நேரில் பார்வையிட்டார்.
அது சமயம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தனபிரியா தாசில்தார். ஆறுமுகம்மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள், தேர்தல் அலுவலர்கள் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக