பாராளுமன்ற பொதுத் தேர்தல் -2024ஐ முன்னிட்டு, பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறை உள்ளிட்டவற்றை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (05.04.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் முதல் மற்றும் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. தருமபுரி பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து இன்று பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளையும், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 183 வாக்குச்சாவடி மையங்களில் அடங்கியுள்ள 272 வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் நடைபெறும் நாளன்று வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாகவும், அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சார வசதி, கழிப்பறை வசதி போன்றவைகள் குறித்தும், பறக்கும் படை குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்களின் செயல்பாடுகள் குறித்தும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் வைப்பறையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதோடு, வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் பொருத்தப்படும் CCTV கேமராக்கள் உரிய பாதுகாப்போடு பொருத்தஅறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அஞ்சல் வாக்குகள் பெறப்பட்டு, அஞ்சல் வாக்குகளுக்கான பெட்டிகள் வரப்பெற்றதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார். மேலும், பாலக்கோடு வட்டம், தெத்துபள்ளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கோவிலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கொத்தலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் தாசன்பள்ளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தேர்தல் நடைபெறும் நாளன்று வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாகவும், அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சார வசதி, கழிப்பறை வசதி, மாற்றுதிறனாளிகள் மற்றும் வயதானவர்கள் வாக்களிக்க சாய்வுதளம் போன்றவைகள் தயார்நிலையில் வைக்க அறிவுரை வழங்கினார்கள்.
இந்நிகழ்வுகளின் போது, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி.தனப்பிரியா, வட்டாட்சியர் திரு.ஆறுமுகம் உள்ளிட்ட தேர்தல் பொறுப்பு அலுவலர்கள் உடனிருந்தனர்.

.jpg)