Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் - மாவட்ட ஆட்சியர் தகவல்.


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சார்பாக உறைவிடம் சாரா கோடைகால பயிற்சி முகாம் மாவட்ட விளையாட்டரங்கம், தருமபுரியில் தடகளம், கையுந்துபந்து, இறகுபந்து, கபாடி மற்றும் டேக்வாண்டோ ஆகிய விளையாட்டு போட்டிகளுக்கு 29.04.2024 முதல் 13.05.2024 வரை நடைபெறவுள்ளது. 

பயிற்சி முகாமில் 18 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொள்ளலாம். பயிற்சி முகாம் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் நடைபெறும். கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகளுக்கு பயிற்சி கட்டணம் தலா ஒருவருக்கு ரூ.200.00 வீதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பயிற்சி கட்டணத்தை Online / POS Machine வாயிலாகவே செலுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் ரொக்கமாக பெறப்பட மாட்டாது.


பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகள் தங்கள் பெயரினை மாவட்ட விளையாட்டரங்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைவரும் ஆதார் கார்டு நகலினை சமர்ப்பித்தல் வேண்டும். பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.  கோடைகால பயிற்சி வகுப்பு நடைபெற உள்ள விளையாட்டுக்களின் விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in எனும் அதிகாரபூர்வ இணையதளம் அல்லது கீழ் குறிப்பிட்டுள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies