மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பெயர் பொறிக்கும் பணி: மாவட்ட ஆட்சியர் ஆய்வு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 11 ஏப்ரல், 2024

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பெயர் பொறிக்கும் பணி: மாவட்ட ஆட்சியர் ஆய்வு.


பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர் சின்னம் பொறிக்கும் பணியினை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கி சாந்தி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.


தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பெண்ணாகரம் சட்டப்பேரவை தொகுதியில் 181 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன. இந்த மையங்களுக்கு அனுப்பப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் துணை இயந்திரம் ஆகியவை பெண்ணாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பெண்ணாகரம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயர் சின்னம் ஆகியவை கணினியின் வாயிலாக பதிவேற்றப்படும் நிகழ்வானது புதன்கிழமை நடைபெற்றது. 


பென்னாகரம் தேர்தல் கண்காணிப்பு அலுவலர் பூங்கோதை, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நர்மதா, வட்டாட்சியர் சுகுமார் ஆகியோர்கள் மேற்பார்வையில், திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி, சுயேச்சை என 24 வேட்பாளர்களின் பெயர், சின்னம் ஆகியவை பதிவேற்றம் செய்யப்படும் பணியினை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, முடிவுற்ற வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்களின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்தார். 


பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பெயர் சின்னம் பதிவேற்றம் செய்யப்படும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக பென்னாகரம் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad