தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி அறிவுறுத்தலின்படி பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்களுக்கு வெயிலின் தாக்கம் குறித்தும், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்விற்கு மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் மருத்துவர் ம.சாந்தி தலைமையில் நடைபெற்றது.
இதில் வெயில் காலத்தில் மோர், இளநீர், நுங்கு, தர்பூசணி, லெமன் ஜூஸ், நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் குளிர்ச்சியான பானங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.வெயில் மற்றும் வெப்ப பக்கவாதத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய வழிமுறைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் வெயிலின் தாக்கத்திலிருந்து காப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் நடைபெற உள்ள மக்களவை த் தேர்தலில் 100 சதவிகித வாக்குப்பதிவினை வலியுறுத்தி கோலங்களின் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்வுகளில் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் கனிமொழி, குழந்தைகள் நல மருத்துவர் பிரபா, மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக