அரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பரசுராமன்தெரு சந்தைமேடு பஜார்தெரு ஆகிய இடங்களில் உள்ள வணிக நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் திமுக வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து பேரூராட்சி துணைதலைவர் சூர்யாதனபால் நகர செயலாளர் முல்லைரவி ஆகியோர் இணைந்து கழக அரசு செய்த சாதனைகள் கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.
இதில் ஆதிதிராவிட நலகுழு மாநில துணை செயலாளர் எஸ்.ராஜேந்திரன் திராவிடர் கழக மாநில நிர்வாகி தமிழ்ச்செல்வி பொதுக்குழு உறுப்பினர் கலைவாணி நகர துணை செயலாளர் செல்வதயாளன் மாவட்ட பிரதிநிதி குமரன் சிறுபான்மை பிரிவு முகமதுஅலி சுதாகர் சரவணன் அம்பிகா கவாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

