வாகன சோதனை மையம் மற்றும் செட்டிக்கரை வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 9 ஏப்ரல், 2024

வாகன சோதனை மையம் மற்றும் செட்டிக்கரை வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப்பிரதிநிதிகளின் முன்னிலையில் நாளை முதல் நடைபெற உள்ள நிலையில் தருமபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் முன்னேற்பாடு பணிகள், மதிகோண்பாளையம் சந்திப்பில் நிலையான கண்காணிப்பு குழுவினர் ஆய்வு பணி மேற்கொண்டு வருவதையும் மற்றும் செட்டிக்கரை வாக்கு எண்ணும் மையத்தினையும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


தருமபுரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் முன்னிலையில் நாளை முதல் நடைபெற உள்ள நிலையில் தருமபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (09.04.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


இதனைத் தொடர்ந்து, பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024ஐ முன்னிட்டு, தருமபுரி மதிகோண்பாளையம் சந்திப்பில் நிலையான கண்காணிப்பு குழுவினர் ஆய்வு பணி மேற்கொண்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று பார்வையிட்டார். மேலும், பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024ஐ முன்னிட்டு, தருமபுரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, அரூர் பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் சேலம் மாவட்டம் மேட்டூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்கு பதிவு இயந்திரங்கள் தேர்தல் முடிந்தவுடன் செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு வாக்குப் பெட்டி இருப்பு அறையில் பாதுகாப்புடன் வைக்கப்படவுள்ளது.

இவ்வாக்கு எண்ணிக்கை மையத்தில் அறைகளின் பாதுகாப்பு, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது, குடிநீர்வசதி, கழிப்பறை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் போதிய காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வருவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்தும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.


பின்னர், வாக்குப்பதிவு முடிந்து அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் இருந்தும் கொண்டுவரப்படும் மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங்களை பெற்றுக்கொள்வதற்கான இடம் குறித்தும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு வரும் வாகனங்களுக்கு தொகுதி வாரியாக தனித்தனியே வழிகள் அமைத்து போக்குவரத்து இடையூர் ஏற்படாத வகையில் வாகனங்கள் எந்த வழியே வந்து எந்த வழியே வெளியே செல்ல வேண்டும் என்பது குறித்த போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி விரிவாக ஆய்வு செய்தார்.


இந்நிகழ்வுகளின் போது, உடன் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.காயத்ரி, வட்டாட்சியர் திரு.பி.ஜெயசெல்வன், தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad