பென்னாகரத்தில் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அன்புமணி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 9 ஏப்ரல், 2024

பென்னாகரத்தில் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அன்புமணி.


தர்மபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியை ஆதரித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஏரியூர் மற்றும் பெரும்பாலை பேருந்து நிலையம் அருகே தேர்தல் பிரச்சாரம் பரப்புரையில் ஈடுபட்டார்.


அப்போது அவர் பேசியதாவது, எனக்கு வெற்றி தோல்வி குறித்து கவலை இல்லை. நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன், ஏரியூரை மையப்படுத்தி புதிய திட்டம் உருவாக்குவேன். அதுவே எனது மிகப்பெரிய நோக்கம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், இரண்டு அரசு கலை கல்லூரிகளை கொண்டு வந்தது பாமக தான் ஏரியூர் பேருந்து நிலையம் வர நான் தான் காரணம்.


நான் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது ரியூர் பேருந்து நிலையம் வர இதற்காக 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கிருந்தேன், பெண் குழந்தைகளின் உரிமைகள் குறித்து ஐநா சபையில் பேசியவர் சௌமியா அன்புமணி. மிகவும் திறமையானவர், பெண்களுக்காக தொடர்ந்து போராடக் கூடியவர் ஐநா சபையில் பேசிய அவருக்கு, பிரதமரிடம் பேசி, தொகுதி மக்களுக்கு தேவையானதை செய்ய முடியாதா, கண்டிப்பாக செய்து தருவார்.


தேர்தல் முடிந்த பிறகு ஏமார்ந்து விட்டோம் என நீங்கள் புலம்புவதை விட, முன்கூட்டியே சிந்தித்து செயல்படவும். எங்களுக்கு ஒரு  வாய்ப்பு தாருங்கள், சௌமியா அன்புமணியை, பொது வேட்பாளராக ஏற்றுக்கொண்டு, அவருக்கு ஆதரவு தாருங்கள். திமுக, அதிமுகவிற்கு 57 ஆண்டுகளாக வாய்ப்பு கொடுத்து தமிழகத்தை பின்னோக்கி கொண்டு சென்று விட்டீர்கள். வளர்ச்சி இல்லாமல் செய்து விட்டீர்கள். 


ஒரு மாற்றம் வேண்டும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக, இந்த பாராளுமன்ற தேர்தலில், திமுக அதிமுக இல்லாத மாற்று அரசியலை, கூட்டணி ஆட்சி அமைய புதிய வழியை ஏற்படுத்தித் தாருங்கள் அதற்கு முன்னோட்டமாக இந்த பாராளுமன்ற தேர்தலில் சௌமியா அன்புமணியை ஆதரியுங்கள் அதிமுக வாக்காளர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்,  பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியாத அதிமுகவிற்கு வாக்களிப்பதை விட, ஊழல் செய்வதையே முழு நேர பணியாக செய்து வரும் திமுகவிற்கு வாக்களிப்பதை விட, உழல் கரை படியாத, இந்த ஆட்சி தொடர வாக்களியுங்கள்.


இந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தால் தான், இனி வரும் காலங்களில், மக்கள் விரோத போக்கு மேற்கொள்ளாமல், மக்களுக்கு தேவையான பல நல்ல திட்டங்களை கொண்டு வருவார் ஸ்டாலின் 7.5 லட்சம் பெண் வாக்காளர்கள் உள்ளனர், இதுவரை தர்மபுரி மாவட்டத்தில் எந்த பெண் வேட்பாளரும் வெற்றி பெற்றதில்லை எனவே, அதற்கு ஒரு நல்ல வாய்ப்பு தற்போது அமைந்துள்ளது.


எனவே பெண்கள் தயவுசெய்து சௌமியா அன்புமணியை ஆதரிங்கள், அவருக்கு வாக்களியுங்கள். எனவே மாம்பழத்சத்தில் வாக்களிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று பிரச்சார உரை நிகழ்த்தினார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad