Type Here to Get Search Results !

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 400 ரூபாயாக ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என கூறி திமுக வேட்பாளர் ஆ.மணி மலைகிராமங்களில் தீவிர பிரச்சாரம்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள ஜிட்டாண்டஅள்ளி, குளிக்காடு, மாரவாடி, குண்டாங்காடு, பாறைக்கொட்டாய், கொத்தளம், போட்றஅள்ளி, மதகேரிஆகிய மலைக்கிராமங்களில், இந்தியா கூட்டணியை சேர்ந்த திமுக  வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.


அப்போது பேசிய அவர் இந்தியா கூட்டணி தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு உரிமைத் தொகை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக குறிப்பிட்டுள்ளது, ஏற்கனவே திமுக அரசு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது.


வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் மாநில, மத்திய அரசுகள் சேர்ந்து பெண்களுக்கு தலா ஆயிரம் வீதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும்.


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 400 ரூபாயாக ஊதியம்  உயர்த்தி வழங்கப்படும், தூள் செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு வாய்க்கால் மூலம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் தண்ணீர் நிரப்பபட்டு விவசாயம் செழிக்க பாடுபடுவோம் என கூறி வரும் 19ம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு பொது மக்களிடம்  கேட்டுக் கொண்டார்.


இப்பிரச்சாரத்ல்  தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன், ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் எம்.வீ.டி.கோபால். இளைஞர் அணி செயலாளர் ஹரிபிரசாத், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர் ஆனந்தன் மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies