குப்பை கிடங்காக மாறிய ஏரியூர் பேருந்து நிலையம் பகுதி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 27 ஏப்ரல், 2024

குப்பை கிடங்காக மாறிய ஏரியூர் பேருந்து நிலையம் பகுதி.


தர்மபுரி மாவட்டத்தில் ஏரியூர் தனி ஒன்றியமாக செயல்பட்டு வருகிறது இத்தகைய முக்கிய நகராக இருக்கிறது ஏரியூர். ஏரியூரில், பேருந்து நிலையம், நியாய விலை கடை, அரசு வங்கிகள், மற்றும் கடைவீதிகள் அமைந்துள்ள பிரதான பகுதியில், நகரின் மையப் பகுதியில், குப்பை கிடங்கு செயல்பட்டு வருகிறது.

ஏரியூருக்கு பள்ளி கல்லூரிக்கு செல்வதற்கும், அரசு மருத்துவமனை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காகவும், வெளியூர் செல்வதற்காகவும் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நியாய விலை கடையில் பொருட்கள் வாங்க வருகின்றனர், மேலும் 200க்கும் மேற்பட்ட வர்த்தக கடைகள் உள்ளது.


இந்நிலையில் ஏரியூருக்கு வரும் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வண்ணமும், இந்த குப்பை கிடங்கு உள்ளது. மேலும் இந்த குப்பை கிடங்கில் பெருச்சாளி, நாய் உள்ளிட்ட இறந்த ஜந்துக்களையும் வீசுவதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடாக உள்ளது. நோய் பரவும் அபாயமும் அதிகரித்து உள்ளது. 


ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் செய்வதறியாது விழி பிதுங்கி நிற்கின்றனர் இப்பகுதி பொதுமக்கள். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க என இப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.