பாலக்கோடு அருகே கண்டமாக்கிய தார்சாலையை சீரமைக்கா விட்டால் போராட்டம் - கிராம மக்கள் தேசியநெடுஞ்சாலை துறைக்கு எச்சரிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 27 ஏப்ரல், 2024

பாலக்கோடு அருகே கண்டமாக்கிய தார்சாலையை சீரமைக்கா விட்டால் போராட்டம் - கிராம மக்கள் தேசியநெடுஞ்சாலை துறைக்கு எச்சரிக்கை.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள சோமனஅள்ளி கிராமத்தில் இருந்து மோதுகுலஅள்ளி, முருக்கம்பட்டி, கரகதஅள்ளி, பனந்தோப்பு, வனம்பட்டி, குத்தலஅள்ளி, காட்டம்பட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு செல்லும் சோமனஅள்ளி தார்சாலையை பயன்.படுத்தி வரும் நிலையில், சோமனஅள்ளி ஏரியில் இருந்து கடந்த ஒரு வருடமாக  புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்க ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட டிப்பர் லாரி மூலம் நொரம்பு மண் அள்ளப்பட்டது.

இதனால்  சோமனஅள்ளி ஏரி வழியாக செல்லும்  மோதுகுலஅள்ளி தார்சாலை முற்றிலும் சேதமானது, நொரம்பு மண் அள்ளி முடித்ததும், புதிய தார்சாலை அமைத்து தருவதாக சாலைஅமைக்கும் பணியினை மேற்கொண்ட ஸ்ரீ இன்பெராடெக் நிறுவனத்தினர் உறுதி அளித்தனர், வேலை முடிந்து ஒரு வருடத்திற்க்கு மேலாகியும் இதுவரை அப்பகுதியில்தார் சாலை அமைக்கப்படாததால், அவ்வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.


மேலும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் பிரிவு சாலையில் பெயர் பலகை மற்றும் மின் விளக்கு இல்லாததாலும் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இது குறித்து கிராம மக்கள் அதிகாரிகளிடம் கேட்டபோது உரிய பதில் அளிக்காமல் அலைகழித்து வந்ததால், 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று திரண்டு உடனடியாக தார்சாலை பெயர் பலகை, மின் விளக்கு அமைக்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் சாலை மறியல், மாவட்ட ஆட்சியர் அலுவலம் முற்றுகை என தொடர்  போராட்டம் நடத்த போவதாக ஸ்ரீ இன்பெராடெக் நிறுவன மேலாளர் மதனிடம் மனு அளித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.